பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி

Author: Babu Lakshmanan
28 July 2021, 1:47 pm
PERARIVALAN - updatenews360
Quick Share

சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கான பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை மருத்துவ காரணங்களுக்காக அவரது தாய் அற்புதம்மாள் அவரை பரோலில் விடுவிக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30 நாட்கள் சாதாரண விடுப்பில் செல்வதற்கு உத்தரவிட்டிருந்த நிலையில் மருத்துவ பரிசோதனைகள் அறிக்கைகள் உரிய ஆணைகள் சமர்ப்பிக்கப்பட்டு பரோலில் விடுவிக்கபட்டார்.

அவரை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் அழைத்து சென்றனர். ஒரு மாதம் பரோல் காலம் முடிந்து பேரறிவாளன் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பியபோது , மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவருக்கு பரோல் முடிவடைய இருந்த நிலையில் பேரறிவாளன் புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Views: - 162

0

0