பெரியாரும், அம்பேத்கரும் தவிர்க்க முடியாத தலைவர்கள், ஆனால்… அண்ணாமலை ‘டுவிஸ்ட்‘!!

17 September 2020, 5:51 pm
BJP Annamailai - updatenews360
Quick Share

கோவை : பெரியாரும் அம்பேத்கரும் தவிர்க்க முடியாத தலைவர்கள், ஆனால் பெரியாருடைய எல்லாக் கருத்துக்களையும் பாஜக ஏற்காது என்று அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: இரு மொழி கொள்கை தான் அதிமுகவின் நிலைப்பாடு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூறியுள்ளார். கூட்டணியில் கொள்கை ரீதியாக முரண்பாடு இருக்கும்.

பெரியாரும், அம்பேத்கரும் தவிர்க்கமுடியாத தலைவர்கள் என்றாலும் எல்லாவித கருத்துக்களையும் பாஜகவால் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழி கொள்கையை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர்.

இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர். நடிகர் சூர்யா இந்த முறை நீட் தேர்வு குறித்து பேசியது புரிதல் இல்லாமல் போல் இருந்தது. நீட் விவகாரம், மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் தேர்வு குறித்து தவறான பிம்பம் ஏற்படுத்தப்பட்டதே காரணம்.நீட் தேர்வின் வினாத்தாள்களும் தமிழக பாடத்திட்டத்தை அதிகம் ஒட்டியே உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Views: - 7

0

0