பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை : எல்.முருகன் அதிரடி..!

17 September 2020, 4:06 pm
bjp chennai 1- updatenews360
Quick Share

சென்னை : சமூக நீதிக்காக போராடிய பெருயாருக்கு வாழ்த்து சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் முன்னோடியாக இருக்கும் தந்தை பெரியாரின் 142வது பிறந்த நாளை, தமிழகம் முழுவதும் திராவிடக் கொள்கையை கொண்ட கட்சிகள், அமைப்புகள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேபோல, பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளையும் பா.ஜ.க.வினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள கமலாலயத்தில் பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை குறிக்கும் விதமாக, 70 அடி நீள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வினர் ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

bjp chennai- updatenews360

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பேசியதாவது :- பிரதமர் மோடியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். பிறருடைய கலாச்சாரத்தை மறைக்காமல், எங்களது கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம்.

நீட் தேர்வை கொண்டு வந்த போது காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது தி.மு.க. ஆனால், தற்போது, நீட் தேர்வை எதிர்ப்பது போல திமுக நாடகமாடி வருகிறது. 13 மாணவர்களின் உயிரில் விளையாடியதும் தி.மு.க.தான்.

சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாரின் பிறந்த நாளில், அவருக்கு வாழ்த்துக்களை சொல்கிறோம். இதில் எந்த தவறும் இல்லை. எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை, எனத் தெரிவித்தார்.

Views: - 8

0

0