சிறப்பான சம்பவம்… இன்னைக்குமா…? பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
2 May 2022, 8:30 am

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் கடந்த 137 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது.

ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் நேற்று எந்தவித மாற்றமுமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்நிலையில் தொடர்ந்து 26வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது.

  • samantha explains about crying in stage நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!