தொடர்ந்து விலை உயரும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் கலக்கம்..!!
Author: Aarthi Sivakumar5 October 2021, 8:40 am
சென்னை: பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்துள்ளது. அதேபோல, டீசல் விலையும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகத்திலே உள்ளது.
அந்த வகையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100.23 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.95.59 ஆகவும் விற்பனையாகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்திருக்கிறது.
0
0