ஜெட் வேகத்தில் விலை உயரும் பெட்ரோல், டீசல்: ரூ.102ஐ கடந்து விற்பனையாகும் பெட்ரோல்…!!

Author: Aarthi Sivakumar
10 October 2021, 8:07 am
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்து விற்பனை செய்யப்படுவது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விற்பனையானது.

இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.27க்கும், டீசல் விலை ரூ.96.93க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ101.53க்கும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ.97.26க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Views: - 239

0

0