இன்றோடு 3 மாதங்கள் ஆகிருச்சு…ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்: வாகன ஓட்டிகள் ஆறுதல்..!!

Author: Rajesh
2 February 2022, 8:26 am

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 90 நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த 90 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 90வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • actor good night manikandan to be act in simbu film directed by vetrimaaran வெற்றிமாறன் படத்தில் குட் நைட் மணிகண்டன்? சிம்பு படத்தை குறித்து வெளியான மாஸ் தகவல்!