காளைக்கு பதிலாக பன்றி : தேனி அருகே நடைபெற்ற விநோத பன்றிபிடி போட்டி!!

17 January 2021, 9:14 pm
Pig Competiton - Updatenews360
Quick Share

தேனி : குறமகள் வள்ளிநகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பன்றி பிடி போட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். காளைகளை அடக்கும் காளையர்களுக்கு வெற்றி பரிசுகள் வழங்கப்படும்.

ஆனால் தேனி அருகே பன்றிகள் வைத்து பன்றி பிடி போட்டி நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்றியை பார்த்தாலே ஒதுங்கி செல்லும் நிலையில், பன்றிகளை கட்டித் தழுவும் போட்டி நடந்துள்ளது,.

தேனியில் நடைபெற்ற பன்றி தழுவும் விசித்திர போட்டி... ஆச்சரியப்பட வைக்கும் காரணம்

தேனி அருகே உள்ள குறமகள் வள்ளிநகர் குடியிருப்பு பகுதியில் பன்றிக்ளை கட்டித் தழுவும் விநோத போட்டி நடந்துள்ளது. இது குறித்து கூறிய அப்பகுதி மக்கள், சங்க காலத்தில் உழவிற்கு காளைகளுக்கு பதிலாக பன்றிகள் தான் பயன்படுத்தப்பட்டது என்றும், அதன் தொடர்ச்சியாக இந்த போட்டி நடத்துவதாக கூறினர்.

சுமார் 70 முதல் 100 கிலோ எடையுள்ள பன்றிகள் மட்டுமே இந்த போட்டியில் பயன்படுத்தப்பட்டு, வாடிவாசல் போலவே பன்றிகளை அவிழ்த்துவிடப்படுகிறது. பன்றியின் பின்னங்காலை பிடிக்கும் போது அது தன்னை பிடித்தவர்களை சேர்த்து இழுத்து செல்லும், அப்படி யார் பன்றியை பிடித்து நிறுத்துபவர்கள் வெற்றியாளர்கள்.

இப்படி பன்றியை பிடித்து இழுத்து தனது வீரத்தை நிரூபிக்கும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இப்படி வினோதமாக நடைபெறும் பன்றிபிடி போட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 4

0

0