பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு.!!

10 August 2020, 7:34 pm
Pillur Dam - Updatenews360-Recovered
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு கடந்த வாரம் 32 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து இருந்து தற்போது படிப்படியாக குறைந்து 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நிரம்பியது.

அணையின் மொத்த கொள்ளவான 100 அடியில் 97 அடிவரை தண்ணீர் தேங்கியதால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளும் திறக்கபட்டு தண்ணீரானது உபரியாக வெளியேற்றபட்டது.

விநாடிக்கு 10,000 கன அடி முதல் 35,000 கன அடி தண்ணீர் வரை உபரியாக பவானி ஆற்றில் திறக்கபட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானி அம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கியது, மேலும் சிறுமுகை அருகே உள்ள காந்தவயல் உயர்மட்டபாலமும் தண்ணீரில் மூழ்கியது.

இந்த நிலையில் நேற்று பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் அணைக்கான நீர் வரத்தும் வெகுவாக குறையத் துவங்கியுள்ளது.

நேற்று முந்தினம் வரை 16,000 கன அடிவரை தண்ணீர் வரத்து இருந்த நிலையில் பின்னர் அது மெல்ல மெல்ல குறைந்து தற்போது 6,000 கன அடியாக குறைந்துள்ளது, இதனையடுத்து பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் 6,000 ஆக குறைக்கபட்டுள்ளது

பில்லூர் அணையின் மேல் மதகு தற்போது மூடப்பட்டுள்ளது அணையின் நீர்மட்டம் 86 அடியாக குறைக்கப்பட்டு அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து மின்சார உற்பத்திக்காக 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Views: - 8

0

0