டாஸ்மாக் மினரல் வாட்டரில் கலப்படம்: பைப் தண்ணீரை ஏமாற்றி விற்றது அம்பலம்: புலம்பும் குடிமகன்கள்…!!

Author: Sudha
14 August 2024, 6:01 pm

குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இந்த கடையோடு சேர்ந்து அரசு பார் உள்இயங்கி வருகிறது இங்கு மது அருந்த வரும் குடிமகன்களுக்கு பாட்டில் தண்ணீர் உட்பட சைட் டிஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு பாட்டில் தண்ணீர் 15 ருபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில் வழங்கப்படும் தண்ணீரை தரமாக வழங்காமல் குழாய் தண்ணீரை பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனை அறிந்துகொண்ட அந்த பகுதியை சேர்ந்த நபர்கள் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவதை கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!