ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு முன்னாள் அமைச்சர் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. 2 சென்ட் நிலம் வழங்கிய எஸ்பி வேலுமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 1:53 pm

கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாவிற்கு தனது சொந்த செலவில் 2 செண்ட் இடம் வாங்கி கொடுத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்டிலி வழங்கி வருகிறார்.

மேலும் படிக்க: கோவையில் களைகட்டிய RED LIGHT AREA… சத்தமே இல்லாமல் மசாஜ் சென்டரில் நடந்த சமாச்சாரம்.. அதிர்ச்சி தகவல்!!

அவரது நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டின் அருகில் இரண்டு செண்ட் இடம் வாங்கி அவரது பெயருக்கு பத்திரபதிவு செய்த நிலையில் இடத்தின் பத்திரத்தை தற்பொழுது பாட்டி கமலாத்தாவிடம் ஒப்படைத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!