பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Author: Babu Lakshmanan
31 July 2021, 11:43 am
12th Exam - Updatenews360
Quick Share

பிளஸ் 2 தேர்வு தனித்தேர்வர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் மாணவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.தேர்வு எழுத விரும்புபவர்களும், பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 6, 9, 11, 13, 16, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 27ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

Views: - 143

0

0