எஸ்.பி.பி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் : மருத்துவமனை தகவல்

21 August 2020, 4:07 pm
SPB - Updatenews360
Quick Share

சென்னை : பின்னணி பாடகர் எஸ்பிபி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி கடந்த 5ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் நலமாக இருந்த அவர் நோய் பாதிப்பு அதிகரித்தன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கிடந்த 12ஆம் தேதி இரவு முதல் அவரின் உடல்நிலைக் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் எஸ்பிபி உடல்நிலை குறித்து தகவலை தெரிவித்துள்ளது. எஸ்பிபியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமா உள்ளதாகவுங்ம, நுரையூரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. நேற்று சினிமா பிரபலங்கள் சார்பில் எஸ்பிபி குணமாக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதே போல கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளார்,.

Views: - 25

0

0