பிரதமர் வருகை எதிரொலி.. கோவை மாநகரில் இன்று முதல் 5 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை..!!

Author: Babu Lakshmanan
15 March 2024, 9:23 am

பிரதமர் மோடி வருகையை ஒட்டி கோவை மாநகரில் இன்று முதல் ட்ரோன்கள் பறக்க தடை தட விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளதை ஒட்டி கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் இன்று முதல் பல்வேறு பகுதிகள் தற்காலிக RedZone பகுதிகளாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

17ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து, 18ஆம் தேதி கோவை மாநகரில் மேட்டுப்பாளையம் சாலை ஹவுஸிங் யூனிட் அருகில் இருந்து ஆர்எஸ் புரம் வரை பிரதமர் மோடியின் Road Show நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று (15.03.2024) முதல் 19.03.2024 தேதி வரை கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகள் தற்காலிக Red Zone பகுதிகளாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. எனவே இந்த பகுதிகளில் தற்காலிகமாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!