‘உங்க கட்சியில் மொத்தமா ரெண்டே பேரு தான்’… பாஜக கொடியை எரித்த பாமக நிர்வாகி ; கூட்டணியில் சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
17 April 2024, 10:40 am

பாமகவினரை கலந்து ஆலோசிக்காமல் பாஜகவினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் எனக் கூறி பாஜக கொடியை தீயிட்டு கொளுத்திய பாமக நிர்வாகியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூலில் இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, தான் புள்ளநேரி பகுதியைச் சேர்ந்தவன், பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

மேலும் படிக்க: அதிமுக மதவாதக் கட்சியோ.. தேசத்துரோக கட்சியோ கிடையாது… ஆனால்…. அமைச்சர் பிடிஆர் பரபர பேச்சு..!!!

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பாமக நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல் பாஜகவினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பாஜகவில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பாஜக நிர்வாகிகள் மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன், எனக்கூறி பாஜகவினரின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பின்னர், இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார்.

மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அதன் வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!