விடாக்கொண்டன் ராமதாஸ்… அவருக்கு இன்னொரு முகம் இருக்கு.. 10.5% இடஒதுக்கீடு கன்ஃபார்ம் : வைரலாகும் டுவிட்..!!
Author: kavin kumar2 November 2021, 11:14 pm
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் பாமக தலைவர் ராமதாஸ் பெற்று தருவார் என முந்தைய கால நடவடிக்கை ஒப்பிட்டு பாமக ஆதரவாளர் கூறிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி வன்னியர் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக ஆட்சியின் போது பாமகவின் கோரிக்கையை ஏற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உருவாக்கி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டம் இயற்றியது. இந்த உள்ஒதுக்கீடு வழங்க தடைக்கோரி 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை தமிழக அரசு ஏற்று மேல்முறையீட்டு வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தரும் என எதிர்பார்த்து மக்கள் காத்துள்ளனர். இந்த சூழலில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாமகவின் ஆதரவாளர் ஒருவர், பாமக அமைதியான வழியில் போராடி இட ஒதுக்கீட்டை பாமக தலைவர் ராமதாஸ் பெற்று தருவர் என கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது;- மருத்துவர் ஐயாவின் மறுபெயர் விடாக்கொண்டன் ’ 2002 பாபா திரைப்படத்தில் மது கோப்பை, சிகரெட் காட்சிகளை தவிர்க்க அறிக்கையில் சொன்னார் அன்று ஏற்கமறுத்த சூப்பர் ஸ்டார் 2019ல் கோபக்கார டாக்டர் ஐயாவின் அறிக்கைக்கு என்றுமே நான் ரசிகன் என்றார். செப் 17, 1949 தந்தைப்பெரியார் பிறந்தநாளில் அவரை களங்கபடுத்தி துவங்கப்பட்ட திமுகவை செப்டம்பர் 17, 1987 தந்தைப்பெரியார் பிறந்த அதே
தினத்தில் மருத்துவரய்யா இட ஒதுக்கீடு போராட்டத்தை துவக்கி பெரியார் விரும்பிய இட ஒதுக்கீட்டை பெரியாரை எதிர்த்த திமுக கையாலேயே 1989ல் தர வைத்து அன்றைய திமுக தலைவர் கலைஞருக்கு மஞ்சள் துண்டை ஐயா போர்த்தினார்.
2004ல் தமிழ் திரைப்படங்கள் தமிழில்தான் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று மருத்துவர் ஐயா போராட திரையுலகம் திண்டாட வேறுவழியின்றி அரசாங்கம் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என அறிவிப்பு செய்து இன்றுவரை தமிழில்தானே தலைப்புகள் வெளியாகின்றன. 2006ல் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களை அழித்து துணைநகரத்திட்டத்தை அரசு செயல்படுத்த மருத்துவர் ஐயா நேரடியாக களத்தில் இறங்கி 132 கிராம மக்களை அணி திரட்டவும் திட்டத்தை அரசு கிடப்பில் இட்டது நியாபகத்தில் இல்லையா.
1989 பாமகவை நிறுவியபோதே ‘சமச்சீர் கல்வி’ என்பதை கொள்கையாக அறிவித்து பல சட்டப் போராட்டங்களை நடத்தி 2010ல் தமிழக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தாரே மறந்து போயிற்றா? இன்னும் எத்தனை எத்தனை போராட்டங்கள் மது ஒழிப்பு,டாஸ்மாக் நேரம் குறைப்பு, நாடகக்காதலர்களிடமிருந்து பெண்களுக்கு விழிப்புணர்வு, ரயில்வேயில் தட்கல் அறிமுகம், புகைவண்டியில் புகைக்கத் தடை , பொதுவிடங்களில் புகைத்தால் அபராதம் என தனது சமூக சீர்த்திருத்த எண்ணங்களை அரசு வழியாகவே செயல்வடிவமாக்கியவர். இத்தனைக்கும் இவர் கால் சட்டமன்றம் நாடாளுமன்றம் என்ன? ஊராட்சிமன்றத்தில் கூட பதிந்ததில்லையே. தான் பிறந்த சமுதாயத்திற்காக 10.5 சதவீத என்ன! 20.5 சதவீத கூட பெற்றுத் தருவார். விடாக்கொண்டனைப் பெற்ற பாட்டாளிகளே! அற்பர்கள் அற்ப மகிழ்ச்சியில் திளைக்கட்டும் கடந்து செல்லுங்களேன் இனிப்பை பறிமாறும் நாளிற்கு மட்டும் காத்திருங்கள்.இவ்வாறு கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2
0