மாணவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிஸ்டாலினுக்கு எதிர்ப்பு; திமுக− பாமக தள்ளுமுள்ளு

10 September 2020, 11:05 pm
Quick Share

அரியலூர்; நீட்தேர்வால் உயிரிழந்த மாணவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதிஸ்டாலினுக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தால், திமுக பாமகவினர் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தில் நீட்தேர்வு மனஉளைச்சலால் விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டான். இந்நிலையில் விக்னேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் எலந்தங்குழி கிராமத்திற்கு வந்தார். அப்போது உதயநிதிஸ்டாலினை அஞ்சலி செலுத்தவிடாமல் பாமகவினர் தடுத்தனர். இதனால் திமுக பாமகவினர் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. பின்னர் பாமவினர் கோஷமிட்டபடி உடலை வேறு வழியாக தூக்கி சென்று ஊர்வல வண்டியில் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதையடுத்து, உடல் எடுத்துச் செல்லப்பட்ட பின்பு விக்னேஷ் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி, மாணவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை திமுக சார்பாக வழங்கினார்.

Views: - 5

0

0