போலீஸ் உடையணிந்து கேரள நகை வியாபாரியிடம் ரூ.76 லட்சம் வழிப்பறி : 15 மணி நேரத்தில் 5 பேர் கைது!!

20 January 2021, 2:24 pm
Robbery Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தக்கலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் கேரள நகை வியாபாரியின் காரை மறித்து கொள்ளையடித்த சம்பவத்தில் 15 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் நெய்யாற்றிகரை பகுதியை சேர்ந்தவர் சம்பத் இவர் பிரபல நகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கேரள மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள மற்ற நகை கடைகளுக்கும் மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு நகையை விற்பனை செய்த பணம் ரூபாய் 76 லட்சத்து 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு கேரளாவிற்கு சொகுசு காரில் புறப்பட்டனர்.

இந்த நிலையில் தக்கலை அருகே கார விளை தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருக்கும் போது மற்றொரு சொகுசு காரில் போலீசார் உடையணிந்து வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் அந்த பணத்தை சினிமா பட பாணியில் வழிமறித்து கொள்ளையடித்து சென்றனர்.

தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் சம்பத் தக்கலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காரை வழிமறித்து ரூ.76.40 லட்சம் கொள்ளையடிக்க போலீஸ் வேடமணிந்து வந்த 4-மர்ம நபர்களையும் பிடிக்க போலீசார் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கொள்ளையர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததில் அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் திருவனந்தபுரத்தை சேர்ந்த டிரைவர் கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன், ராஜேஷ்குமார், மனு என்ற சஜின்குமார் ஆகிய 5-பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 76.40 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய கார் போலீஸ் உடை மற்றும் 10-செல்போன்களை பறிமுதல் செய்தனர். 15-மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் பாராட்டினார்.

Views: - 0

0

0