சாட்சியங்களை கலைக்க முயற்சி… முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் விரட்டி பிடித்த போலீஸ்.. சினிமா பாணியில் நடந்த சேசிங் சம்பவம்!

Author: Babu Lakshmanan
1 April 2023, 1:29 pm

இளைஞரிடம் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக முன்னாள் பெண் காவல் ஆய்வாளரை சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்து அழைத்து சென்ற காவல்துறையினர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்த பெண் ஆய்வாளர் வசந்தி என்பவர் 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ. 10 லட்சம் பணம் பறித்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, முன்னாள் ஆய்வாளர் வசந்தி நிபந்தை ஜாமினில் வெளியில் உள்ளார். இந்நிலையில் வழக்கின் சாட்சியான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவரை மிரட்டி சாட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, இன்று மதுரை சிலைமான் மற்றும் ஊமச்சிகுளம் காவல்துறையினர் மதுரை அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரி அருகே காரில் சென்றபோது, முன்னாள் ஆய்வாளர் வசந்தியை சினிமா பாணியில் சேசிங் செய்து மடக்கிபிடித்து கைது செய்து ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர். பின்னர், புகார் அளிக்கப்பட்டுள்ள ஸ்ரீவல்லிபுத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

https://player.vimeo.com/video/813781305?h=159b99e3f9&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • netizens asking that if any issue between nayanthara and vignesh shivan because of screenshot நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே அப்படி என்ன பிரச்சனை? இன்ஸ்டா பதிவால் ஏற்பட்ட களேபரம்!