வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2025, 7:01 pm
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி மற்றும் முரளி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன.
மேலும் ராஜி மற்றும் அவருடைய மனைவி லட்சுமி உயிரிழந்த நிலையில் அவருடைய பிள்ளைகளான ராஜலட்சுமி மற்றும் அவருடைய தம்பி முரளி ஆகிய இருவருக்கும் நான்கு சென்ட் அளவிலான நில பிரச்சனை உள்ளது. அதில் தற்போது முரளி வீடு கட்டியும் வாழ்ந்து வருகிறார்.
இதன் காரணமாக முரளியின் தாயார் லட்சுமியின் நினைவு நாளை முன்னிட்டு ராஜலட்சுமி திதி கொடுக்க முரளியின் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அக்கா தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் 100 நம்பருக்கு போன் பண்ணி காவல்துறையினரை ராஜலட்சுமி அழைத்து உள்ளார்.
அப்போது அங்கு வந்த போலீசார் திடீரென வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து முரளியின் வீட்டிற்கு உள்ளே சென்றுள்ளார்.
இதையும் படியுங்க: கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!
இதனை முரளியின் மனைவி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து ஆளில்லாத நேரத்தில் போலீசார் அத்து மீறி காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளே வருகிறார் என சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவு செய்தார்.
அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் முரளியின் வீட்டின் அருகே வந்தனர்
முரளிதரப்பினர் நிலப் பிரச்சனை சம்பந்தமாக புகார் உள்ளது அதற்கு போலீசார் வரவேண்டியதில்லை மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என ஜோலார்பேட்டை போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுவர் ஏறி குதித்து போலீஸ் விசாரணையால் பரபரப்பு!#Trending | #TNPolice | #court | #viralvideo pic.twitter.com/EegXmraZI0
— UpdateNews360Tamil (@updatenewstamil) May 3, 2025
மேலும் இந்த சம்பவம் சிவில் பிரச்சனை என்பதால் போலீசாரம் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து திரும்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.