2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

Author: Hariharasudhan
31 March 2025, 6:52 pm

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்: நெல்லை மாவட்டம், கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (33). இவர், திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2016ஆம் ஆண்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இவர் கடந்த ஜனவரி 27ஆம் தேதி சிறையில் உள்ள கழிவறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும், அவருடைய கழுத்து எலும்பு முறிந்த நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து, இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், ஏசுதாஸ் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, கொலை செய்வதற்களைப் பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தினர். இதனிடையே, மாஜிஸ்திரேட்டும் சிறைக்குள் சென்று இக்கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். ஆனால், இந்தக் கொலைச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகியும் கொலை செய்தவர்கள் யார் என்று துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Coimbatore Central Jail prisoner murder

மேலும், இது குறித்து தனியார் நாளிதழுக்கு போலீசார் கூறுகையில், “கைதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதில் யார் கொலையாளிகள் என அடையாளம் காண முடியவில்லை. அதோடு, சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்புக் கேமராக்களும் வைக்கப்படவில்லை. மேலும், ஏசுதாஸ் அடைக்கப்பட்ட அறைக்கும், அவர் உயிரிழந்து கிடந்த கழிவறைக்கும் 100 அடி தூரம் தான் இருக்கும்.

இதையும் படிங்க: விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

எனவே, அந்த நேரத்தில் அங்கு சென்ற நபர்கள் யார், உயிரிழந்த ஏசுதாசுக்கும், சிறையில் உள்ளக் கைதிகளில் யாருக்கெல்லாம் முன்விரோதம் இருந்தது, ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேக நபர்களான 20 பேரை 5 நபராக பிரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்” எனக் கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!