ரவுடி சங்கர் உடலை மறுபிரேத பரிசோதனை கோரிய மனு : செப்.,14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

10 September 2020, 4:57 pm
rowdy shankar encounter - updatenews360
Quick Share

சென்னை : போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கரின் உடலை மறுபிரேத பரிசோதனை கோரிய மனு மீதான விசாரணை செப்.,14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், கஞ்சா வியாபாரியுமான சங்கரை, கடந்த 21ம் தேதி கொலை வழக்கில் கைது செய்ய போலீசார் முற்பட்டனர். அப்போது, போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்கு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடி சங்கர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ரவுடி சங்கரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, ரவுடி சங்கரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி உறவினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, என்கவுண்டர் செய்த அயனாவரம் காவல்நிலைய ஆய்வாளர் நடராஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமா..? இல்லையா..? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணையின் முடிவில் தீர்மானிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Views: - 0

0

0