கொரோனாவால் இறந்தவர்களின் உடலில் இருந்து நகைகள் திருட்டு: ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் கைது

Author: Udhayakumar Raman
29 June 2021, 6:56 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவில் இறந்தவரின் உடலில் இருந்து நகை திருடிய ஜிப்மர் ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் இறந்தவர்களின் உடலில் இருந்து நகைகள் காணாமல் போவதாக கோரிமேடு காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது, இதையடுத்து சார்பு ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் கோரிமேடு குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவந்தனர், விசாணையில் ஜிப்மர் மருத்துவமனை பிணவறையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் வானூர் ஓட்டை கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (43),

என்பவர் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தாம் தான் நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார், இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் படி திருடுப்பட்ட 2.1/2 பவுன் நகை மீட்க்கப்பட்டு, திருட்டில் ஈடுப்பட்ட ஒப்பந்த ஊழியரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..

Views: - 521

0

0