போட்டு வைத்த திருட்டு திட்டம் : 5 பேரை அலேக்காக தூக்கிய போலீசார் .! நகை வியாபாரிகள் மகிழ்ச்சி!!
16 January 2021, 6:46 pmகன்னியாகுமரி : நாகர்கோவிலில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்றிரவு நகை திருட திட்டம் தீட்டிய 5 பேரை கோட்டார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய எஸ்.ஐ ராஜேஷ் மற்றும் தனிப்படையினர் நேற்றிரவு நாகர்கோவில் பகுதியில் ரோந்து சென்றனர் .அப்போது இந்துக் கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கும்பலாக 5 பேர் இருட்டில் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனை கண்ட போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.தொடர்ந்து அவர்களை விசாரித்த போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அஜய் கண்ணன்(வயது 20) கலை சங்கர் (வயது 22 ) கோகுல் (வயது 24) காளியப்பன் ,சுதன் என்பது தெரியவந்தது.
பின்னர் , அவர்கள் 5 பேரையும் போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது அவர்கள் 5 பேரும் சேர்ந்து மீனாட்சிபுரத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் நகை திருட திட்டம் தீட்டி நேற்றிரவு நகை திருட தயாராக இருந்தது தெரியவந்தது .இதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேர் மீதும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் மூலம் நாகர்கோவிலில் அரங்கேற இருந்த பெரிய நகை திருட்டு சம்பவம் ஒன்று தடுத்து திறுத்தப்பட்டுள்ளது.நகை திருடர்கள் 5 பேர் சிக்கிய சம்பவம் குமரி நகைகடை வியாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0