திடீரென புதைக்கப்பட்ட உடல்.. பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

Author: Hariharasudhan
6 November 2024, 11:18 am

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி என்பது வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட ஊர் ஆகும். இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.4) நள்ளிரவு பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் குழி தோண்டி, அதில் சடலம் புதைக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, காலை நேரத்தில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து உள்ளனர். அதேநேரம், சுடுகாட்டில் கிராமத்தில் இறக்கும் நபர்களை சுடுகாட்டில் தற்போது புதைக்கப்படுவதில்லை என்றும், பொள்ளாச்சி பகுதியில் உள்ள மின் மயானங்களில் தகனம் மற்றும் எறியூட்டப்படுவதாகவும் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே, அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

இந்தத் தகவலின் பேரில் ஆனைமலை காவல் நிலைய கண்காணிப்பாளர் ஸ்ரீமதி உத்தரவின் பேரில், ஆனைமலை ஆய்வாளர் தாமோதரன் மற்றும் கோட்டூர் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளனர். இந்த விசாரணையில், அருகில் உள்ள தனியார் காயர் கம்பெனியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் மங்கல தேவி (74) என்ற மூதாட்டி, கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் சரியில்லாமல், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர், காயர் கம்பெனி வீட்டில் தங்கி இருந்து உள்ளார். இதனையடுத்து, நேற்றைய முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காயர் கம்பெனி உரிமையாளர் முருகநாதன் ஊர் தலைவர்களிடம் கூறிவிட்டு, நேற்று நள்ளிரவு உயிரிழந்த மூதாட்டியின் உடலை பாலமநல்லூர் கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் புதைத்துச் சென்றதாக உயிரிழந்த மூதாட்டியின் உறவினர் லட்சுமி சாந்தா போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

மேலும், உயிரிழந்த மூதாட்டியின் உடலை பீகார் மாநிலத்திற்கு தங்களால் கொண்டு செல்ல முடியாது எனவும், எனவே இங்கேயே உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் பேரில், சுடுகாட்டில் மூதாட்டியின் சடலத்தை புதைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : ஆரம்பிப்போமா.. மீண்டும் மெல்ல உயரத் தொடங்கும் தங்கம் விலை

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 166

    0

    0