தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

Author: Hariharasudhan
3 March 2025, 2:32 pm

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் 40 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகியதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு கணவர்களையும் அப்பெண் பிரிந்துள்ளார்.

இதனையடுத்து, மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, இவர்கள் இருவரும் அதே பகுதியில் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். மேலும், இந்தப் பெண்ணுக்கு 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு 13 வயது மகள் உள்ளார். இந்த நிலையில், இந்தச் சிறுமி கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, வளர்ப்புத் தந்தையான மூன்றாவது கணவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இதனை வெளியே சொல்லக்கூடாது என்றும் அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். எனவே, தனது தாய் வீட்டிற்கு வந்ததும் நடந்த விவரங்களைக் கூறி சிறுமி கதறி அழுதுள்ளார்.

Sexual abuse by father in Nilgiris

ஆனால் இதனைக் கேட்ட தாய், இது குறித்து வெளியே சொல்ல வேண்டாம் எனக் கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே, அந்த சிறுமி தன் பள்ளி ஆசிரியர் மூலமாக 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

இதன் பேரில், குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, குன்னூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் வளர்ப்பு தந்தை மற்றும் தாயார் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!