திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூர கொலை.. இபிஎஸ் முக்கிய கேள்வி!

Author: Hariharasudhan
29 November 2024, 12:25 pm

திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி – அலமாத்தாள் தம்பதி, தங்களது தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம் ஆகும். இவரது மகன் செந்தில்குமார். இவர் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தா.

மேலும், இவர் தனது மனைவி கவிதா மற்றும் தனது மகன் மற்றும் மகளுடன் கோவை மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், செந்தில்குமார், தனது பெற்றோரைப் பார்க்க அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (நவ.28) இரவு மர்ம நபர்கள் சிலர், தெய்வசிகாமணியின் தோட்டத்துச் சாலைக்கு வந்து உள்ளனர்.

பின்னர், தெய்வசிகாமணியை தோட்டத்தில் வைத்து வெட்டியது மட்டுமல்லாமல், அதை தடுக்கச் சென்ற அலமாத்தாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகியோரையும் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று (நவ.29) காலை தெய்வசிகாமணியின் வீட்டிற்கு முடித்திருத்த தொழிலாளி ஒருவர் வந்துள்ளார்.

அப்போது, அங்கு 3 பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக இது குறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசிபாளையம் போலீசார், பல்லடம் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார், தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் முதற்கட்ட விசாரணையில் நகை பணம் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது, கொலை செய்த மர்ம கும்பலைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாகி உள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கண்டனப் பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

EPS on Tiruppur family murder

அந்தப் பதிவில், “திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. புதுக்கோட்டையில் பரபரப்பு!

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், “இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?” என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன. தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் மு.க.ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் கூறி உள்ளார்.

  • Sivrajkumar health update பிரபல கன்னட நடிகருக்கு புற்றுநோய் ..அடுத்தடுத்து காவு வாங்கும் டிசம்பர் மாதம்..சோகத்தில் ரசிகர்கள்..!
  • Views: - 97

    0

    0

    Leave a Reply