மாணவி சொன்ன வாக்குமூலத்தை பொய்யாக்குகிறதா திமுக அரசு? அண்ணாமலை குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2025, 4:42 pm

மாணவி சொன்ன வாக்குமூலத்தை மறைத்து வழக்கு வேறு திசையில் பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்குள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தனது மொபைல் போனை, ஏரோப்ளேன் முறையில் வைத்திருந்ததாக, சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்க: நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு… வெகுண்டெழுந்த மக்கள் : சாலை மறியலால் பரபரப்பு!

இந்த நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Annamalai Confirmed that Police involved in Anna university Sexual Assault case and divert

தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!