உன் மேல ஆசை.. உல்லாசமா இருக்கலாமா? புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர்!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2025, 12:53 pm

பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்பொழுது அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.உடனடியாக இது குறித்து ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பைக் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மற்றும் வாகனத்தை திருடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடு போன வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆவடி குற்றபிரிவை சேர்ந்த காவலர் ஹரிதாஸ் என்பவர் சம்பந்தபட்ட புகார்தார் பெண்ணை தொடர்புகொண்டு திருடு போன வாகனம் கிடைத்து விட்டது,வாகனத்தை பெற்றுக்கொள்ள வரும்படி அழைத்துள்ளார்.

மேலும் இதற்காக 15000 ரூபாய் பணமும் கேட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அப்பெண் போலீசாரிடம் 15000 கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என பேரம் பேசி,5000 ரூபாய் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.இதனை பெற்றுக்கொள்ள காவலர் ஹரிதாஸ் அப்பெண்ணை தொடர்பு கொண்டு நேரில் அழைத்துள்ளார்.

மேலும் 2000 ரூபாயை பெற்றுக்கொண்ட காவலர் மீண்டும் தொடர்பு கொண்டு மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை கண்டுபிடித்துள்ளோம் என தொடர்ந்து பேச்சு கொடுத்த காவலர் உன்மீது எனக்கு ஆசையாக உள்ளது,என்னுடன் தனிமையில் நீ இருக்க வேண்டும் உனக்காக அறை எடுத்துள்ளேன் என கூறி ஆவடியில் உள்ள நீச்சல் குளம்,பார் வசதி உள்ள பிரபல விடுதியான பிரீத்தா கார்டனுக்கு அழைத்துள்ளார்.

இதனை கேட்ட அப்பெண் அதிர்ந்துள்ளர்.இது குறித்து தனது அண்ணனிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அப்பெண்ணின் அண்ணன் தகாத முறையில் நடந்துகொண்ட காவலர் ஹரி தாஸை விடுதியில் வைத்து கையும் களவுமாகப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து விடுதி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தகாத முறையில் நடக்க முயன்ற போலீசாரை மீட்டு அங்கிருந்து காவல்நிலையம் அழைத்து சென்று பத்திரப்படுத்தி வைத்தனர்.

இதனையடுத்து பாதிக்கபட்ட பெண் மற்றும் அவரது அண்ணன் ஆவடி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் கனகராஜ் காவலர் ஹரிதாசிடம் விசாரணை நடத்தி பின்னர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர் ஹரிதாஸ் மீது வழக்கு பதிய உத்தரவிட்டார். இதனை அடுத்து காவலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…
  • Leave a Reply