Youtube இல் வலை இன்ஸ்டாவில் விலை | பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆபாச யூடியூபர்! இதெல்லாம் காலக்கொடுமை!

14 June 2021, 7:55 am
Police Officials Initiated Serious Investigation Against Madan OP Of Youtube Fame
Quick Share

இன்றைய காலகட்டத்தில் படிப்பறிவில்லாதவர்களின் வீடுகளை கூட எளிதில் கண்டுபிடித்து விடலாம், ஆனால் ஸ்மார்ட்போன் இல்லாத வீட்டைக் கண்டுபிடிக்க முடியாது. அந்தளவுக்கு குடிசை முதல் மச்சு வீடுகள் வரை ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் தான். இந்த கொரோனா காலத்துக்கு முன்பாவது, இருந்தால் வீட்டுக்கொரு ஸ்மார்ட்போன் தான் இருக்கும். ஆனால் இந்த லாக்டவுனால் வீட்டில் ஆளுக்கொரு ஸ்மார்ட்போன் இருக்கிறது. 

குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்களின் கைகளில் பொழுதுக்கும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. போதாகுறைக்கு பள்ளி செல்ல முடியாததால் கேட்டால் ஆன்லைன் கிளாஸ் என்று ஈசியாக சொல்லிவிடுகின்றனர். பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஸ்மார்ட்போன்களில் ஆன்லைன் வகுப்புக்கு Zoom, Google Meet செயலிகள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக PUBG, Free Fire, GTA, Youtube, இன்ஸ்டாகிராம், போன்ற செயலிகள் கட்டாயம் இருக்கும்.

PUBG தடைச் செய்யப்பட்டாலும் VPN மூலம் அதற்கான அணுகலைப் பெற்று இன்னும் விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றனர். இதுபோன்ற ட்ரிக்ஸ் எல்லாம் சொல்லிக்கொடுப்பவர் தான் மதன் எனும் யூடியூபர். இவர் MADAN என்ற யூடியூப் சேனலை வைத்து இயக்கி வருகிறார். இந்த சேனலுக்கு சுமார் 8 லட்சம் சந்தாதாரர்களும் இருக்கின்றனர். தினமும் 12 மணி நேரம் நேரலையில் கேம் விளையாடி லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது தான் இவரது வேலை. இதை யூடியூபில் லைவ் ஸ்ட்ரீம் செய்வதன் மூலம் பணம் சம்பாதித்தும் வருகிறார். இவரின் சேனல் பிரபலமாக முக்கிய காரணம் இவரின் ஆபாச பேச்சு தான்.

இயர்போன்ஸ் உடன் ஹெட்செட் போட்டுக்கொண்டு பல பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆபாச பேச்சோடு இயங்கும் இந்த யூடியூப் சேனலை அதிகம் பார்த்து வருகின்றனர். இதனாலேயே இவரின் சேனலிலுள்ள வீடியோக்கள் எல்லாம் பல லட்ச கணக்கில் views களைப் பெற்றுள்ளன. 

குறிப்பாக பெண்களைப் பற்றி கொச்சை கொச்சையாக காதில் கேட்க முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் பேசி வருகிறார். அப்படி ஆபாசமாக பேசியும் பல பெண்கள் நான் உங்கள் ரசிகை, நீங்க கெட்ட வார்த்தைப் பேசுவது ரொம்ப பிடிக்கும், உங்களை பார்க்க வேண்டும் என்று இன்ஸ்டாவில் இந்த யூடியூப் காமுகனிடம் வலிந்து கொண்டு பேசி கொண்டு தான் இருக்கின்றனர். இவர்கள் இப்படி வலிந்து கொண்டிருப்பது அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியுமா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

Police Officials Initiated Serious Investigation Against Madan OP Of Youtube Fame

இவர் தான் PUBG, GTA போன்ற கேம்களின் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் எல்லாம் சொல்லி தருகிறார் என்றில்லை. தமிழுலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஏராளமான நல்ல யூடியூப் சேனல்கள் நல்ல முறைகள் சொல்லிக்கொடுக்கவும் செய்கின்றனர். இருந்தாலும் பிரபல முன்னணி யூடியூப் சேனலான Black Sheep கடந்த பிப்ரவரி மாதம் ஆளுங்கட்சி ஆதரவுடன் இயங்கும் தனியார் தொலைக்காட்சி சேனலின் உதவியோடு நடத்திய விருது வழங்கும் விழாவில் எவ்வளவோ நல்ல சேனல்கள் இருந்தும் இந்த ஆபாச வார்த்தைகள் பேசும் காமுகனின் சேனலுக்கு விருது வழங்கியுள்ளது. Tamil Gaming தமிழ் கேமிங் போன்ற நாகரீகமான சேனல்கள் எல்லாம் இருந்தும் பெண்களைப் பற்றியும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளைப் பற்றியும் ஆபாசமாக பேசும் ஒரு கேமிங் சேனலுக்கு விருது வழங்கி இருப்பது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இந்த சேனல் ஒரு நபரால் நடத்தப்படுவது அல்ல. இந்த சேனலுக்காக 40 க்கும் மேற்பட்ட மீம் கிரியேட்டர்கள், 5 க்கும் மேற்பட்ட வீடியோ எடிட்டர்கள், MODS என்ற பெயரில் பலரும், ஸ்பான்சர்களாக நிர்மல் ரெட்டி, பார்தி, வினோத் குமார்  என்பவர்களும் இருப்பதாக அந்த சேனலில் சமீபத்தில் அந்த சேனலிலேயே வெளியான வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்சொன்ன ஸ்பான்சர்களில் நிர்மல் ரெட்டி என்பவரின் தந்தை திமுக வில் இருப்பதாகவும் இந்த ஆபாச யூடியூபரே ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். Super Chat இல் இந்த சேனலுக்காக பல ஆயிரங்கள் நிர்மல் ரெட்டி வழங்குவதாகவும், இவர் மதனின் நெருங்கிய நண்பர் என்பதும்  தெரியவந்துள்ளது.

Police Officials Initiated Serious Investigation Against Madan OP Of Youtube Fame


இதனால் ஈர்க்கப்படும் பல சிறு வயதிலான மாணவர்கள் தாங்களும் இந்த சேனலில் தோன்றும் Gpay, Paytm, UPI மூலம் பணம் செலுத்துகின்றனர். இந்த பணமெல்லாம் நன்கொடை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் உண்டா என்பது தெரியவில்லை.

அது மட்டுமில்லாமல் யூடியூபில் கிடைக்கும் ரசிகைகளின் INSTA ID யைப் பெற்று இவர் இன்ஸ்டாகிராமிலும் தனது பக்கத்தில் பெண்களிடம், நான் உன்னை மூன்றாவது மனைவியாக கல்யாணம் செய்து கொள்கிறேன், நைட் வீடியோ கால் பேசலாம் என்றெல்லாம் ஆபாசமாக பேசி காதல் வலையில் விழச் செய்து பல மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும், ஆபாச படமெடுத்து விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது மட்டுமில்லாமல் பல பள்ளி கல்லூரி மாணவர்களும் இவரின் உதவியுடன் புதிய கேமிங் யூடியூப் சேனல்களை ஆரம்பித்தும் வருகின்றனர். அவரை விதையிலிருந்து சுரைக்காய் முளைக்காது என்று சொல்வது போல், இவர்களின் உதவியுடன் புதிதாக யூடியூப் சேனல் துவங்குபவர்களும் ஆபாச  பேச்சுக்களை பேசியே சேனலில் வீடியோக்களைப் பதிவிடுகின்றனர்.

இது தவறு என யாரேனும் குறை கூறினால், அதான் 18+ என்று குறிப்பிட்டிருக்கே, இஷ்டமென்றால் பாருங்க இல்லனா போங்க என்பதே இதற்கான பதிலாக இருக்கிறது. இதையடுத்து இந்த பிரச்சினை சமீப நாட்களுக்கு பெரிய அளவில் உருவெடுத்துள்ளதை அடுத்து சரியான நடவடிக்கை  எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஒரு சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் என்ன மாதிரியான வீடியோக்களை இணையத்தில் பார்க்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம் என்பதை மீண்டும் நினைவுப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. தங்கள் பெற்றோர்கள் அருகில் இருக்கும்போது இயர்போன்ஸ் இன்றி ஒரு கேம் விளையாடவோ வீடியோ பார்க்கவோ முடியும் என்றால் அதுவே நல்லது என்பதை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டிப்பாக புரிந்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். 

Views: - 266

0

0