ஜார்கண்ட் TO கோவை கஞ்சா கடத்தல்: ரயிலில் 23.5 கிலோ கஞ்சா பறிமுதல்…பயணிகள் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
26 October 2021, 1:00 pm
Quick Share

கோவை: ஜார்கண்டில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து 23.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் இன்று காலை 9 மணியளவில் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது ரயில்வே குற்றப்பிரிவு போலீசார் அந்த ரயிலில் S4 என்ற பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த இருக்கையின் அடியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அங்கிருந்த 16.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே பெட்டியில், இன்னும் கஞ்சா பதுக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரயில்வே டி.எஸ்.பி யாசின் தலைமையிலான போலீசார் அதே பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர் அப்போது வேறு ஒரு இருக்கையின் அடியில் 7 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே ரயிலில் 23.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ரயில் நிலைய பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 286

0

0