போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. சுட்டுப்பிடித்த போலீசார்!

Author: Hariharasudhan
3 February 2025, 7:56 pm

ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவ விசாரணையில், போலீசார் ஒருவரை சுட்டுப் பிடித்துள்ளனர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிப்காட் காவல் நிலையம் மீது இன்று அதிகாலை நேரத்தில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அப்போது, காவல் நிலையத்தின் நுழைவாயில் இரும்பு கேட் மூடப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் பரபரப்புக்கு உள்ளாகி, எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்தைச் சந்தித்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார், காவல் மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த தனிப்படை போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் தலைமையிலான போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

Police fired and catch a man in Petrol bomb attack in Ranipet Police station

இந்த நிலையில், காவேரிப்பாக்கம் அருகே போலீசார் தனிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஹரி என்பவரை போலீசார் பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அவர், காவல் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய பார்க்கனும்’.. 4வது மாடியில் நின்று மிரட்டல்.. காவலர் காயம்.. சென்னையில் பரபரப்பு!

இதனையடுத்து, தப்பி ஓடிய ஹரியை போலீசார் கால் முட்டியில் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து, ஹரியால் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனுக்கும், காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் அடைந்த ஹரி ஆகிய இருவருக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!