”சட்டத்தை நீங்களே மீறுவது நியாயமா” கோவையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ உட்பட இருவர் கைது!!

4 February 2021, 6:29 pm
Sulur Police Station - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சூலூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மருதையா பாண்டியன் (வயது 56). அதே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் சக்திவேல் (வயது 27). இவர்கள் இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சூலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மருதையா பாண்டியன்

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் (வயது 30) என்பவரை நிறுத்தி விசாரித்ததில் அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. தொடந்து முருகன் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவரது வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

சக்திவேல்

இதனையடுத்து முருகன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 6 ஆயிரம் ரூபாயை கொடுத்தனுப்பினர்.

மேலும், காவல் நிலையம் அருகே மறைந்திருந்தனர். அந்த பணத்தை காவலர் சக்திவேலிடம் முருகன் கொடுத்தார். அதனை வாங்கிய சக்திவேல், உதவி ஆய்வாளர் மருதையா பாண்டியனிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

இதையடுத்து மருதையா பாண்டியன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். லஞ்சம் பெற்ற வழக்கில் இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Views: - 29

0

0