ஏழை மாணவனின் ஆன்லைன் கல்விக்கு உதவிய காவல் உதவி ஆய்வாளர் : குவியும் பாராட்டு..!

24 October 2020, 5:15 pm
SI Help Poor Boy - Updatenews360
Quick Share

கோவை: ஆன்லைன் கல்வி பயில செல்போன் வாங்கும் வசதி இல்லாத ஏழை மாணவனுக்கு சிங்காநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் செல்போன் வாங்கி கொடுத்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த ஏழை மாணவனுக்கு செல்போன் வாங்கும் வசதி இல்லை. பொதுமுடக்க காலத்தில் வருமானம் நலிவடைந்த தந்தைக்கும் செல்போன் வாங்கித்தரும் வசதி இல்லை.

பள்ளியில் நன்றாகப் படிக்கும் இந்த மாணவன் சிரமப்படுவதாக ஆத்மா அறக்கட்டளை மற்றும் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து ஆத்மா அறக்கட்டளையின் நிறுவனர் கந்தவேலனுடன் இணைந்து, சிங்காநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார் அந்த மாணவனுக்கு செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 18

0

0