மகன், மருமகள், குழந்தைகளை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் : மூதாட்டி கண்ணீர் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2021, 10:25 am
Family Grandma - Updatenews360
Quick Share

நெல்லை அருகே காவல் துறையினர் அடித்து துன்புறுத்தி இழுத்து சென்ற மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை ஒப்படைக்க வேண்டுமென்று மூதாட்டி காவல் துறை கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் சொர்ணம் என்பவரின் மனைவி முத்துலட்சுமி. இவர் நேற்று உறவினர்களுடன் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் எனது மகன் ரமேஷ் ராமையா, மருமகள் ஆறுமுகத்தம்மாள் மற்றும் 2 பேத்திகள், ஒரு பேரன் ஆகியோர் நேற்று மாலை வீட்டில் உட்கார்ந்திருந்தோம்.

அப்போது போலீசார் 7 பேர் வந்து என்னுடைய மகன், மருமகள், பேரக்குழந்தைகளை அடித்து, இழுத்து சென்றுவிட்டனர். பின்னர் போலீசார் மீண்டும் நள்ளிரவில் வீட்டுக்கு சென்று பீரோவில் இருந்த வீட்டு பத்திரம், வங்கி பாஸ் புத்தகம் மற்றும் பைக் ஆகியவற்றை எடுத்துச்சென்று விட்டனர்.

நேற்று காலை சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு சென்று கேட்ட போது போலீசார் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது பற்றி தெரியவில்லை.

எனவே அவர்களின் நிலை குறித்து விசாரித்து அவர்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறி உள்ளார்.

Views: - 168

0

0