மணல் கடத்தல் லாரியை விடுவிக்க போலீஸ் வாக்கி டாக்கியை திருடிய கும்பல்: 4 பேரை கைது செய்த காவல்துறை!!

Author: Aarthi Sivakumar
25 September 2021, 9:25 am
Quick Share

புதுக்கோட்டை: கீரனூரில் காவலரிடம் வாக்கி டாக்கியைத் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் காவரிடம் மர்மநபர்கள் வாக்கி டாக்கியை திருடியதாக கூறப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணல் திருடர்கள் சேர்ந்து காவலர் அன்பழகனின் வாக்கி டாக்கியை திருடியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், மணல் கடத்தல் வாகனத்தை விடுவிக்கக் கோரி வாக்கி டாக்கியைத் திருடி அதை மணலில் புதைத்து வைத்தது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில், தற்போது நான்கு பேரைக் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த இன்பசுரேஷ், முகேஷ், கண்ணன் உள்ளிட்ட 4 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 166

0

0