பார்சல் லாரியில் வந்த வாசனை… திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி : ஓட்டுநர் அதிரடி கைது!
Author: Udayachandran RadhaKrishnan23 August 2025, 3:54 pm
காரைக்காலில் இருந்து பார்சல் ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்றது. காரைக்காலில் இருந்து திருத்துறைப்பூண்டி மன்னார்குடி வழியாக லாரி சென்ற போது மன்னார்குடி நகர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் மன்னார்குடி தேரடி பகுதியில் வாகனத்தை மறைத்து ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருவரும்பூரை சேர்ந்த ராஜ்குமார் என்பதும் அவர் பார்சல் ஏற்று செல்லும் லாரியில் மது பாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
மேலும் மன்னார்குடி மேம்பாலம் பகுதியில் லாரியை நிறுத்தி அதில் இருந்து மது பாட்டில்களை மற்றொரு காருக்கு மாற்றியதும் தெரிய வந்தது.இது குறித்து மன்னார்குடி போலீசார் ராஜ்குமாரை கைது செய்த அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
