டாஸ்மாக் கடை விற்பனையாளர் மீது மதுபாட்டில் வீசிய காவலர் : கூடுதல் விலை வசூலித்ததால் தகராறு!!

By: Udayachandran
9 October 2020, 2:41 pm
Kanchipuram Tasmac Prob- Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடையில் மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் கடை விற்பனையாளர் மீது பூந்தமல்லி போக்குவரத்து தலைமை காவலர் மது பாட்டில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள வேடல் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் முருகன் மற்றும் அவரது உறவினர் மது வாங்க வந்தனர்.

அப்போது மது விற்பனையாளருக்கும் தலைமை காவலர் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த காவலர் முருகன் தகாத வார்த்தையில் கடையின் விற்பனையாளரை வசைபாடி கையில் வைத்திருந்த மது பாட்டிலை கடைக்குள் எறிய முயற்சி மேற்கொண்டுள்ளார். இதை கடை விற்பனையாளர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தலைமை காவலர் முருகனிடம் கேட்கும்பொழுது அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால் அதற்கு உண்டான விளக்கம் கேட்கும்பொழுது சம்பந்தமில்லாமல் வெளிநபர் தன்னிடம் பிரச்சனை செய்ததாகவும் ஆத்திரத்தில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தாகவும் தெரிவித்தார். மேலும் கடைகாரரிடம் எந்தவிதமான பிரச்சினையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அரசு மதுபான கடை விற்பனையாளர் கூறியபோது சம்பந்தப்பட்ட காவலர் மீது டாஸ்மாக் மேலாளரிடம் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

Views: - 39

0

0