நான் யாருன்னு தெரியுமா? குடிபோதையில் பேருந்தில் பயணிகளிடம் ரகளை செய்த காவலர் : அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2021, 6:03 pm
Police Liquor -Updatenews360
Quick Share

சென்னையில் ஓடும் பேருந்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட காவலரின் வீடியோ வெளியாகி வைரலாகி வரகிறது.

சென்னை வண்டலூர் முதல் கோயம்பேடு செல்லும் 17B பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் குடிபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டார். பேருந்தில் இருந்த பயணி ஒருவரை தாக்க முற்பட்ட காவலரை பார்த்து பயந்த பயணிகள், காவலரை கீழே இறக்கி விடுங்கள் என நடத்துநரிடம் வற்புறுத்தினர்.

தலைகேறிய போதையில் தள்ளாடிய காவலரை நடத்துநர் கீழே இறங்க சொன்ன போது, நடத்துநரையும் தாக்க முற்பட்டார். இதுகுறித்து பயணிகள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை வைத்து சம்மந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த காவலர் யார், என்ன என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

உண்மையிலேயே போதையில் இருந்த நபர் காவலராக இருந்தால் அவர்மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சி நிர்வாகிகள் முதல் மக்களை காக்க வேண்டிய அரசு அதிகாரிகளே இதுபோன் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

Views: - 242

0

0