ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான அரசியல் பிரமுகர்கள்.. பாஜக பெண் நிர்வாகி தலைமறைவு!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2024, 11:51 am

பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் அருகே ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் முதற்கட்டமாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி திருவெங்கடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பித்து ஓட முயற்சித்தால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் 3 பேர் கைதாகி உள்ளனர். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் என்பவர் கைது செய்ப்பட்டார். அடுத்து, அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்க்கொடி, மற்றொரு அரசியல் பிரமுகரான வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, தற்போது வடசென்னை பாஜக மகளிர் அணி பிரமுகரான புளியந்தோப்பு அஞ்சலையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • cooku with comali season 6 contestants list குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!