பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள தலைவர் சிலைகளை அகற்றுங்கள் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2021, 1:54 pm
Statues Removed Order -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரக்கோணத்தில் தலைவர் சிலை ஒன்றை தாசில்தார் அகற்றியது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து பேசிய நீதிபதி, அரசியல் கட்சிகள் தங்களது விருப்பப்படி சிலைகளை அமைக்கின்றனர். சமுதாயத்திற்காக தியாகம் செய்தவர்கள் எந்த நேரத்திலும் சாதி, மத அடிப்படையில் அடையாளப்படுத்தக் கூடாது என்று கூறினர்.

மேலும் பொதுமக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகளை அமைப்பது தொடர்பாக விரிவான விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அரசியல் கட்சி, மதம், சாதி மற்றும் மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதால் தமிழகம் முழுவதும் பொது இடங்களில், நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 444

0

0