கட்சியும் இல்லை, தொகுதி மக்களும் இல்லை… விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன்..அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!!

By: Udayachandran
9 October 2020, 5:32 pm
Minister Kadamboor - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கட்சியும், தொகுதி மக்களும் ஒதுக்கி விட்டதாக நினைத்து பொன்ராதாகிருஷ்ணன் விரக்தியில் உள்ளார் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் ஒன்றிய பகுதியில் உள்ள 6 கிராமங்களில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். கூட்டணி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி கேட்டதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜக. தலைவர் கிடையாது, பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதைக்குரியவர், பெரியவர், அவர் விரக்தியில் உள்ளார்.

பா.ஜ.க ஒதுக்கிவிட்டதாக, தொகுதி மக்களும் ஒதுக்கி விட்டதாக, ஏதோ விரக்தியில் இருக்கிறார் என்பது அவர் பேசுவதை பார்க்கும் போது தெரிகிறது. அதை நாம் கருத்தில் கொள்ள வேண்டாம், கூட்டணி பற்றி மேலிடம் அல்லது தலைவர் சொல்ல வேண்டும், தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் முருகன் தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார். கூட்டணி தொடர்கிறது என்று சொல்லியுள்ளார். எனவே பொன்.ராதாகிருஷ்ணக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது என்றார்.

CM Jayalalithaa Deserves Bharat Ratna, says Pon. Radhakrishnan

மத்தியரசிடம் நமது உரிமை தொடர்பான பிரச்சினை வரும் பொழுது, தமிழக மக்களுக்கு நியமான உரிமை கிடைக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் தெளிவாக உறுதியாக இருக்கிறார். காவிரி நீர், முல்லைபெரியாறு, நெய்வேலி என்.எல்.சி பங்கு விற்பனை, ஜல்லிக்கட்டு மீட்பு என பல்வேறு பிரச்சினைகளில் சமரசம் செய்யமால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Edappadi says proof documents not compulsory for NPR - The Hindu

நீட் தேர்வுக்கு எதிராக இறுதி வரை போராடிய மாநிலம் தமிழகம், இந்திய குடியரிமை சட்டம் வந்த போது தமிழகத்தில் யாரும் பாதிக்க கூடாது என்று வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் திமுகவினர் அனைத்தையும் தாரை வார்த்தனர், கச்சதீவை தாரை வார்த்தனர். காவிரி, முல்லை பெரியார் பிரச்சினையில் நடவடிக்கை இல்லை.திமுகவினர் அதிகாரத்தில் இருந்த போது எதையும் செய்யமால் தற்பொழுது அரசியலுக்காக பேசுகின்றனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என்றார்.

MK Stalin DMK Leader Wallpaper - HD Background

உரிமை மற்றும் உணர்வு பிரச்சினைகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வலியுறுத்துவார் என்று அமைச்சப் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

Views: - 45

0

0