வெள்ளி அனுமதியில்லையா.. இனி திமுகவுக்கு சனிதான் : பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2021, 4:25 pm
Pon Ji Attack Dmk-Updatenews360
Quick Share

தெய்வங்களுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை எனில் திமுக ஆட்சிக்கு சனி பிடிக்க போகிறது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வாரத்தின் அனைத்து நாட்களும் வழிபட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று பாஜகவினர் பல இடங்களில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எதிரில் போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை எனில் திமுக ஆட்சிக்கு சனி பிடிக்க போகிறது.

திமுக போலி மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசு புறந்தள்ளப்பட வேண்டிய அரசாக உள்ளது. செய்த பாவங்களை போக்க கோவில்களுக்கு அதிகளவில் வருவது திமுகவினர் மட்டுமே.

வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோயில் வழிபாட்டிற்கு தடை செய்வது தமிழக அரசின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என தெரிவித்துள்ளார்.

Views: - 414

0

0