பாதியிலேயே வெளியேறிய ரங்கசாமி… நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன..? புதுச்சேரி அரசியலில் பரபர..!!!

8 March 2021, 8:28 pm
NR congress rangasamy - updatenews360
Quick Share

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி பாதியிலேயே வெளியேறிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடருமா.. தொடராதா.. என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இணைவது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர், கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியில் சேர உள்ளதாக ரங்கசாமி நிர்வாகிகளுடன் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தை பாதியிலே முடித்து ரங்கசாமி புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி முடிவு குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Views: - 1

0

0