புதுச்சேரியில் செவ்வாய் தோறும் முழு ஊரடங்கு..! முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி

12 August 2020, 10:41 pm
Pondy Narayanasamy - updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.  மருத்துவமனைகளில் உள்ள அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிட்டன. 41.78 சதவீத கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதனிடையே மாநிலத்தில் இன்று 481 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,381 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 96 ஆகவும் இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 2,616 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாளை மறுநாள் முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள்திறக்க அனுமதி தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 10

0

0