பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே இத்தனை கோடிகளா.?

Author: Rajesh
9 July 2022, 5:25 pm
Quick Share

மணிரத்னத்தின் பிரம்மாண்ட கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுக்க 5 மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பிரமாண்டமாக தயாரித்த இந்த வரலாறு படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மிகவும் அதிகமகா உள்ளது.

இந்த படம் வெளிவதற்கு முன் படக்குழு இப்படத்தில் நடித்துள்ள முக்கிய கத்பாத்திரத்திரங்களின் கேரக்டர் போஸ்டர்களை வெளியிட்டு ப்ரோமஷன் பணியை முடிக்கிவிட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியாகியுள்ளது.

அதில் ஒவ்வொரு காட்சியும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட காட்சியமைப்பும், அதற்கு இசைப்புயலின் பிரமிக்க வைக்கும் இசையும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.இதனை பார்க்கும் போதே படம் எப்போது ரிலீஸ் ஆகுமோ இந்த தமிழ் மன்னனின் பிரமாண்டத்தை எப்போது பார்ப்போமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே சுமார் ரூ. 24 கோடிக்கும் டிப்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் தென்னிந்திய அளவில் அதிக விலைக்கு விற்றுப்போன முதல் திரைப்படம் இதுதான் என்று கூறப்படுகிறது.

Views: - 118

1

0