அழகூரில் பூத்தவளே : படக்குழு வெளியிட்ட பீஸ்ட் மேக்கிங் வீடியோ வைரல்.!

Author: Rajesh
15 April 2022, 6:12 pm
Quick Share

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஷாப்பிங் மாலை ஹேஜேக் செய்த தீவிரவாதிகளிடம் இருந்து எவ்வாறு விஜய் மக்களை காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதையாகும்.

இந்த படத்தில் விஜய்யை காட்டிலும் பூஜா ஹெக்டேவை நெட்டிசன்கள் அதிகமாக பாராட்டி வருகின்றனர். அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட படல்களில் பூஜாவின் நடனம் மிகவும் பேமஸ் ஆனது. அதோடு இந்த படத்தில் அவரது டைமிங் காமெடியும் பக்காவாக ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்தில் பெரிதும் பேசப்படாத நாயகி பீஸ்ட் மூலம் மிகவும் அறியப்பட்ட ஹீரோயின்ஸ் பட்டியலில் சீட் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் 5 மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த 13-ம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விமர்சங்களை பொறுத்தவரை கலவையான விமர்சங்களையே பெற்றுள்ளது. அதோடு பெரும்பாலான திரையரங்குகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஹவுஸ் புல் போர்ட் வைக்கப்பட்டது.

முதல் ஷோவுக்கு நேரில் திரையரங்கு வந்த பூஜா ஹெக்டேவை ரசிகர்கள் செம்ம குஷியில் வரவேற்பு அளித்துள்ளனர். செண்டை மேளத்துடன் தேவதை போல நாயகி வந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடினர். இந்நிலையில் ப்ரோமோஷனுக்காக பூஜா ஹெக்டேவுடன் நடத்தப்பட்ட நேர்காணல் குறித்த வீடியோவையும், அரபிக் குத்து பாடல் மேக்கிங் வீடியோவையும் சன்பிக்சர்ஸ் ரிலீஸ் செய்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 570

15

3