கோவையில் குளங்கள் சீரமைக்கும் பணி “விறுவிறு“ : மாநகராட்சி ஆணையர் ஆய்வு!!

19 September 2020, 11:51 am
Lake Alter - updatenews360
Quick Share

கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.19.36 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணம்பதி குளம், ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் குமாரசாமி, செல்வம்பதி ஆகிய குளங்கள் புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.19.36 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணம்பதி குளம், ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் குமாரசாமி செல்வம்பதி ஆகிய குளங்கள் புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளைமாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இவற்றில் மேற்கு மண்டலத்தில் உள்ள கிருஷ்ணம்பதி குளம் ரூ.19.36 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் குமாரசாமி செல்வம்பதி குளம் ரூ.31.25 கோடி மதிப்பீட்டிலும் குளங்களின் கரைகளை பலப்படுத்தி, புனரமைத்து சீரமைக்கும் ஆரம்பப் பணிகள் நடைபெற்று வருகிறது.

குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும். இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய (பெட் லேன்ட்) அமைத்தல், மதிவண்டி பாதை அமைத்தல், உபரிநீர் சிற்றணை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், மிதக்கும் நடைபாதைகள் அமைப்பதற்கான பணிகள், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை குறிப்பிட்ட ஒப்பந்த தேதிக்குள் செய்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாநகரப்பொறியாளர் லட்சுமணன், மாநகர செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.