பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா : மருத்துவமனையில் அனுமதி!!
5 August 2020, 3:46 pmபூம்புகார் தொகுதியின் எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அதேவேளையில், நோய் தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இருப்பினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த நோய் தொற்றுக்கு அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில், பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே, தமிழக எம்.பி.க்கள் செல்வராசு, கார்த்தி சிதம்பரம் சே. ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.