பிரபல ரவுடி MLA மர்ம கும்பலால் நடுரோட்டில் வெட்டிகொலை.. குலை நடுங்க வைத்த சம்பவம்..!

Author: Vignesh
3 July 2024, 3:54 pm

அரியூரில் பிரபல எம் எல் ஏ ராஜா ஒரு கும்பலால் நடுரோட்டில் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

வேலூர்மாவட்டம், அரியூரில் பிரபல ராஜ்குமார் என்ற எம்.எல்.ஏ ராஜா சரித்திர பதிவேடு கொண்ட பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்தவர். அரியூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த போது பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் அரியூரிலேயே மடக்கி சரமாரியாக ராஜாவை வெட்டியதில் எம் எல் ஏ ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவல்துறையினருடன் சென்று சில இடங்களில் அதிரடியாக ஆய்வு செய்து கொலையில் தொடர்புடைய 4 பேரை பிடித்துள்ளனர் சிலர் தப்பியுள்ளனர். பலியான ராஜாவின் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது காவல்துறையினர் விசாரணைக்கு பின்பு தான் தெரிய வரும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!